இலங்கை

ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல்

Published

on

ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல்

பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் (Eiffel Tower) பற்றுச்சீட்டு விலை 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வாறு ஈபிள் கோபுரத்தின் பற்றுச்சீட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் அதன் சுற்றுலா பற்றுச்சீட்டுகளின் விலைகள் 20% அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன் படி, ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு செல்லும் வயது வந்தோருக்கான பற்றுச்சீட்டு விலை இப்போது €35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னதாக €29.10 என்ற விலையில் இருந்தது.

இந்த நிலையில், உலகின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் பார்வையிடும் இடங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்திற்கு அதிக பாராமரப்பு தேவைபடுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஈபிள் கோபுரத்தின் நீடித்த நிலைப்பாட்டையும் நினைவுச்சின்னத்தை நிர்வகிக்கும் நிறுவனமான SETE இன் நிதி நிலைத்தன்மையையும் உறுதி செய்ய இந்த புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version