இலங்கை

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

Published

on

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் (Minister of Health) பதவி உட்பட அந்த அமைச்சின் பல உயர் பதவிகளில் எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) நிரந்தரமாக இணையவுள்ள ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட வைத்தியர் ஜயருவன் பண்டார (Jayaruwan Bandara) மற்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ (Samal Sanjeeva) ஆகியோருக்கு தகைமையின் அடிப்படையில் உரிய பதவிகளை வழங்காத சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஆளும் கட்சியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Exit mobile version