இலங்கை

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு விளம்பரங்களை செய்து நாட்டில் இயங்கிவரும் இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல கடன் வழங்கும் நிறுவனங்கள் சுற்றுலா விசாவில் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரால் நடத்தப்படுவதாகவும், அவை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு கடனை பெறுவதாகவும், ஆனால் அந்த கடனுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உதாரணமாக, 15,000 ரூபாய் கடன் வாங்கினால், கடன் தொகையைத் தீர்க்க சுமார் 8000 ரூபாய் வட்டி அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கடன் வழங்கும் ஆறு நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கடன் வழங்குநர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version