இலங்கை

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Published

on

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

40 வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் இவர்கள் அடையாள அட்டைகளை (National Identity Card) பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவல்களை ஆட்பதிவு திணைக்களத்தின் (Department for Registration of Persons) ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

ஆணையாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு இம்மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version