இலங்கை

வவுனியா நிலஅதிர்வு குறித்து பேராசிரியர் விளக்கம்

Published

on

வவுனியா நிலஅதிர்வு குறித்து பேராசிரியர் விளக்கம்

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நில அதிர்வானது ஒன்று திரட்ட சக்தியின் வெளிப்பாடு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நில நடுக்கமொன்று குறித்த பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மலை நாட்டில் அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் ஏற்படக்கூடிய நில நடுக்கங்களை விடவும் சமனிலையான தரைப் பகுதியைக் கொண்ட இந்த பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கம் சாதாரண நிலைமையாக கருதப்பட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இவ்வாறான ஓர் நில நடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version