இலங்கை

உயர் நீதிமன்றத்திற்கே சவால் விடுக்கும் ரணில்

Published

on

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சவால் விடுப்பதாகவும் இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால் பயனற்ற நீதிமன்றங்களை மூடிவிடுங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (18.06.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தெடர்பாக அவர் கூறுகையில்,

“ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் பந்து வீசுகின்றார். பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் முதலாவது பந்தை வீசியுள்ளார்.

சூட்சும ஞானம் இருப்பதால் இதனை தந்திரம் குணம் என்று குறிப்பிடலாம். அதனையடுத்து, கோவிட் காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சை விடயத்தை இரண்டாவது பந்தாக வீசினார்.

பெண்கள் வலுப்படுத்தல் தொடர்பான விடயத்தில் பாலின மாற்றத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டங்கள் வருவது சிக்கலுக்குரியது.

உயிரியல் ரீதியிலான பெண்களை பலப்படுத்துவது சரியானது. ஆனால் அந்தப் போர்வையில் பாலின மாற்று வியாபாரத்திற்கு இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றத் தீர்மானத்திற்கு சவால் விடுவது தவறானதே.

அத்துடன், வரிக்கு மேல் வரி அறவிடுவது தவறுதான். என்றாலும் நீதிமன்றத்திற்கு சவால் விடுவது மிகவும் பாரதூரமானதே. அப்படியென்றால் உயர்நீதிமன்றத்தை மூடிவிடுங்கள். அவ்வாறான உயர்நீதிமன்றத்தை வைத்திருப்பதில் பலனில்லை” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version