இலங்கை

மணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றிய படையதிகாரி

Published

on

மணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றிய படையதிகாரி

பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணமகள் தேவை என விளம்பரம் செய்து இவ்வாறு பாரியளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜரின் விளம்பரங்களில் சிக்கி ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பத்து என இதுவரையில் நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பத்திரிகையில் விளம்பரம் செய்து வாடஸ்அப் மூலம் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொண்டு லட்சக் கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தனது சாரதியின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெண்ணிடம் இரண்டு இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளது.

இதேவேளை, இணையம் ஊடாக பெண்கள் மோசடிகளில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அண்மையில் சுமார் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கணனி குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version