இலங்கை

தேங்காய் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தீர்மானம்

Published

on

தேங்காய் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தீர்மானம்

நாட்டின் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா (Roshan Perera) குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம் வரை 42,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்த இறக்குமதி கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணையின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாது என பேராசிரியர் கூறியுள்ளார்.

இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version