இலங்கை

செல்லப்பிராணியால் ஏற்பட்ட விபரீதம்: உயிரிழந்த மாணவி

Published

on

கொழும்பில் (Colombo) பாடசாலை மாணவி ஒருவர் வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி வீதியில் இருந்து ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வளர்த்துள்ளார்.

இருப்பினும், நாய் திடீரென உயிரிழந்த நிலையில் அந்த மரணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு மாணவியும் வெறி நாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனடிப்படையில், தங்கள் செல்லப்பிராணி இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அதை உன்னிப்பாகக் அவதானிக்குமாறு மருத்துவர்கள் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version