இலங்கை

யாழ் கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

Published

on

யாழ்ப்பாணம் (Jaffna) – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மர்ம பெட்டியானது நேற்று (16.06.2024) மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம பெட்டியை மீட்டுள்ளனர்.

மேற்படி மர்ம பெட்டியினுள் தொலைத்தொடர்பு கருவி ஒன்று காணப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version