இலங்கை
சுவீடன் யுவதியின் கொலை விவகாரம் : மைத்திரிக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு
சுவீடன் யுவதியின் கொலை விவகாரம் : மைத்திரிக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட ரோயல் பார்க் கொலை குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா தொடர்பில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்(Tiran Alles ) அலஸ் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நம்புவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவோன் ஜோன்சன் என்ற இலங்கை சுவீடன் யுவதியை கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நீர்மானத்திற்கு அமைய உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
எனினும் இது அரசியலமைப்பிற்கு எதிரானது என கடந்த ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கு தலா 10 மில்லியன் இழப்பீடு வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஜெயமஹா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், கொலைக் குற்றவாளியை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.