இலங்கை

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

Published

on

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 உறுப்பினர்கள் தங்களது அரசியல் கட்சியை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் கிட்டத்தட்ட 15 பேர் முக்கிய கட்சிகளில் பதவி வகிப்பதாக தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு குழுவிரும் தீர்மானித்துள்ளனர்.

மேலும் பல உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் கட்சிமாற்றம் தொடர்பில் ஏற்கனவே தலைவர்களுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டதாகவும், தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னர் உரிய முடிவை அறிவிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டணியில் 17 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று தடவைகளில் இணையவுள்ளதாக மற்றுமொரு அரசியல் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

Exit mobile version