இலங்கை

குறைவடையும் இளம் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

Published

on

குறைவடையும் இளம் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

பெருந்தோட்ட தொழிலுக்கான பயிற்சி பெற்ற இளம் தொழிலாளர்கள் இல்லாதது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பெருந்தோட்டங்களில் உள்ள இளைஞர் சமூகத்தில் பலர் வேறு தொழில்களுக்கு திரும்பியுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

நியாயமான சம்பளம் மற்றும் முறையான வசதிகள் இன்மை காரணமாக இளம் திறமையான தொழிலாளர்கள் பெருந்தோட்ட தேயிலை தொழிலை விட்டு வெளியேறுவதாக தோட்ட முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சில உள்ளூர் தேயிலை தோட்டங்களில் 20 முதல் 30 வயது வரையிலான இளம் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஐந்து பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம் அவற்றில் பணிபுரியும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 3.8 வீதமாகவும் மற்றுமொரு நிறுவனத்தில் 4.4 வீதமாகவும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மற்றைய மூன்று நிறுவனங்களிலும் பயிற்சி பெற்ற இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.3, 6.5 மற்றும் 9.3 சதவீதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version