இலங்கை

தனியார் பேருந்துகள் பயன்படுத்தும் எரிபொருள் தொடர்பில் குற்றச்சாட்டு

Published

on

தனியார் பேருந்துகள் பயன்படுத்தும் எரிபொருள் தொடர்பில் குற்றச்சாட்டு

இலங்கையில் தனியார் பேருந்துகளில் 80 வீதமானவை எரிபொருளாக மண்ணெண்ணெய்யை பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் பயணிகளுக்கு பெரும் ஆபத்து நிலைமை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் அனைத்து தனியார் பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென முன்னணியின் தலைவர் லகி கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி செலுத்தப்படுவதாகவும் இது குறித்து சில பஸ் உரிமையாளர்களும் அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து துறைசார் அதிகாரிகளும், பொலிஸாரும் கவனம் செலுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

எரிபொருளுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் இதுவரையில் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version