இலங்கை

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட போலி சாரதி பாடசாலைகள்

Published

on

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட போலி சாரதி பாடசாலைகள்

நாட்டில் சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அந்த பயிற்சி பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க(Nishantha Anurudtha Weerasingh), தனது உள்ளக கணக்கெடுப்பின்படி நாடளாவிய ரீதியில் 1,500 சாரதி பயிற்சி பாடசாலைகள் இயங்கி வருவதாகவும் அதில் 600 சாரதி பயிற்சி பாடசாலைகள் மாத்திரமே சட்டரீதியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியுடன் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தாங்களாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளை ஆரம்பித்து பதிவு செய்த சாரதி பயிற்சி பாடசாலைகளை சட்டவிரோதமாக தொடர்பு கொண்டு அவற்றை நடத்தி வருவதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

மேலும், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு சாரதி பயிற்சி பாடசாலைகளில் சாரதி பயிற்றுநர்கள் சேர்க்கப்படவில்லை என்றும், 600 சாரதி பயிற்றுநர்களுக்கு நேற்று (14) உரிமம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version