இலங்கை

தென்னிலங்கையில் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடிகை உட்பட பெண்கள் கைது

Published

on

தென்னிலங்கையில் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடிகை உட்பட பெண்கள் கைது

நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு வாகன சேவைகளை வழங்கி பெண்களை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் நடிகை உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் கம்பஹா, அம்பாறை, பொரலஸ்கமுவ, மாத்தறை, பைகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நடிகை பல கவர்ச்சியான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் தனது வாட்ஸ் அப் இலக்கத்தின் மூலம் 30,000 ரூபாயில் இருந்து பல்வேறு விலைகளில் பெண்களை விற்பனை செய்து வருகின்றமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version