இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்த வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை

Published

on

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்த வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவினார் என்று தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆயப்பகுதி அதிகாரியான இவர், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கதிர்காமநாதன் மகிந்தன் அல்லது வெண்ணயனன் என்பவருக்கு உதவியதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு எதிராகச் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், இந்த வழக்கில் இருந்து முன்னாள் ஆயப்பகுதி அதிகாரி கந்தையா யோகநாதனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டார்.

Exit mobile version