இலங்கை
பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை

பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை
பொதுத் தேர்தலில் 120 முதல் 130 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர(Anura Kumara Dissanayake) குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் அதே தினத்திலேயே நாடாளுமன்றை கலைத்து தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படும்.
தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய பின்னணி தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆக காணப்படுகிறது. இது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 120 முதல் 130 ஆக உயர்வடையும்” என்றார்.