இலங்கை

நளின் பண்டாரவின் வாகன விபத்தில் சிக்கிய இளைஞன் தீவிர சிகிச்சைப்பிரிவில்

Published

on

நளின் பண்டாரவின் வாகன விபத்தில் சிக்கிய இளைஞன் தீவிர சிகிச்சைப்பிரிவில்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு வாகனம் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திஹாரிய, கல்கெடிஹேனே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்ற இளைஞனே விபத்தில் சிக்கியுள்ளார்.

வட்டுப்பிட்டிவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சுயநினைவின்றி இருக்கும் இளைஞனின் உயிர் இயந்திரங்களினால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த இளைஞன் தாயாரை இழந்துள்ளதாகவும் அவரது தந்தை தற்போது மன குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version