இலங்கை

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்

Published

on

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கிலான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் திருத்தங்கள் செய்து அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், நுகர்வோர் அதிகாரசபையில் வெறும் 277 உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் சேவையாற்றுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனவும் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி வர்த்தகர்கள் பாரிய லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் போது அதன் நலன்கள் நுகர்வோரைச் சென்றடைவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுகும்புர நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version