இலங்கை

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

Published

on

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ( Mette Frederiksen) தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஃபிரடெரிக்சன், தலைநகர் கோபன்ஹேகன் சதுக்கத்தில் இருந்தபோது நேற்று (07) மாலை 6 மணியளவில் ஒருவரால் பிரதமர் தள்ளப்பட்டதாகவும், இது அவரை தடுமாறச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரை தள்ளிச் சென்றவர் தப்பி ஓட முயன்றபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்ற தாக்குதல் அண்டை நாடான ஸ்லோவேக் பிரதம மந்திரி ரொபர்ட் ஃபிகோ மீதும் அண்மையில நடத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த மே 15ஆம் திகதி ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார்.

ஹன்ட்லோவா நகரில் அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு ஆதரவாளர்களை வாழ்த்திக் கொண்டிருந்த ஃபிகோ அருகில் இருந்து நான்கு முறை சுடப்பட்டார்.

இந்நிலையில், அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

Exit mobile version