இலங்கை

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் தகவல்

Published

on

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் தகவல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நேற்று (06.06.2024) கலந்துரையாலொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அவற்றில் 38,144 உந்துருளிகள் மற்றும் 6,286 மகிழுந்துகள் உள்ளடங்குகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version