இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

Published

on

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

குருணாகல் (Kurunegala) மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து சிறிலங்காக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, உயிரிழந்த பெண் மாவத்தகம காவல் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version