இலங்கை

வெள்ள நிலைமையை பார்க்க சென்ற மகிந்தவின் மனைவிக்கு எதிர்ப்பு

Published

on

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிற்கு (Shiranti Rajapakse) களனி (Kelaniya) பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளப் பேரிடர்களை பார்வையிடச் சென்ற போதே மக்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களனி பிலப்பிட்டிய பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு வெள்ளை வானில் வந்த அவர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version