இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு

Published

on

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது முக்கியம் என மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பகமான அடிப்படையில் அன்னிய கையிருப்பு இருப்பதாக கூறிய அவர், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது அரசு எடுக்க வேண்டிய தீர்மானம் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்ட முறையில் வாகன இறக்குமதியை தளர்த்தியுள்ளதாகவும் அதற்கமைவாக சுற்றுலா வர்த்தகத்திற்காக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான வாகனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதும் முக்கியம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் தேவையான அன்னிய செலாவணியை நிர்வகிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version