இலங்கை

தென் கொரிய பயண கண்காட்சியில் சாதனை படைத்த இலங்கை

Published

on

தென் கொரிய பயண கண்காட்சியில் சாதனை படைத்த இலங்கை

தென் கொரியாவில் (South Korea) அண்மையில் நடைபெற்ற 39ஆவது சியோல் சர்வதேச பயண கண்காட்சியில் (SITF) சிறந்த சாவடி வடிவமைப்புக்கான விருதை இலங்கை சுற்றுலாத்துறை பெற்றுள்ளது.

குறித்த சர்வதேச பயண நிகழ்வு கடந்த மே 09 முதல் 12 வரை நடைபெற்றுள்ளதுடன் இதில் 70 நாடுகள் தங்கள் சுற்றுலா வளங்கள் மற்றும் கலாசாரங்களை வெளிப்பபடுத்தியுள்ளன.

இதில் இலங்கையினால் வடிவமைக்கப்பட்ட சாவடியின் அமைப்பு, கருப்பொருள்கள், சுற்றுலாத் தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் பங்கேற்பாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருவதால் தென் கொரியா இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கைக்கு கொரியப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதில் கலாசார மற்றும் மதப் பின்னணிகள், எண்ணற்ற பயண இடங்கள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளன.

இந்த வருட ஜனவரி முதல் ஏப்ரல் வரை தென் கொரியாவிலிருந்து மொத்தம் 4,005 வருகை தந்துள்ளதுடன் இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது படிப்படியான அதிகரிப்பையும் காட்டியுள்ளது.

Exit mobile version