இலங்கை
இலங்கையர்களுக்கு விசா சலுகை வழங்கும் முக்கிய சுற்றுலா நாடு
இலங்கையர்களுக்கு விசா சலுகை வழங்கும் முக்கிய சுற்றுலா நாடு
இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட விசா சலுகைகளை தாய்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
தாய்லாந்து சுற்றுலா பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சில நாடுகளது பிரஜைகள் விசா இன்றியும், ஒன் அரைவல் விசா மூலமும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்க உள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய விசா நடைமுறைக்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு செல்ல முன்கூட்டியே விசா பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாப் பயணிகள் 60 நாட்கள் வரையில் தாய்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி விசா இன்றி அல்லது ஒன் அரைவல் விசா மூலம் தாய்லாந்துக்குள் பிரவேசிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57 லிருந்து 93 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒன் அரைவல் விசா , இலவச விசா என சில புதிய திட்டங்களின் அடிப்படையில் பல நாடுகளுக்கு விசா சலுகை வழங்கும் நடைமுறை இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் ஒன் அரைவல் விசா மூலம் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.