இலங்கை

விடுதலை புலிகளின் காலத்திலும் ரணிலை ஆதரித்த வடக்கு மக்கள்

Published

on

விடுதலை புலிகளின் காலத்திலும் ரணிலை ஆதரித்த வடக்கு மக்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் நூறு சதவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickramasinghe) வாக்களித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபரின் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran ) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ் ஊடக அமையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கையில், “அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே.

ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது அத்தோடு கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை முன்னிலைப்படுத்துகின்ற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை.

எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன் அத்தோடு வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்ரமசிங்கவிற்கு தான் வாக்களித்தவர்கள்.

ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.

எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்கட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version