இலங்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Published

on

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அடுத்த சில மாதங்களில் பல திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிராமப்புற வசதிகளை மேம்படுத்த சுமார் 20.6 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, அவர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய விவசாய தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்டு உரிய விவசாய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version