இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்(Bandaranaike International Airport) வருகை முனையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் வாகன இயக்கத்தை சீரமைத்தல், பயணிகளின் வசதியை மேம்படுத்துதல் மற்றும் திறமையான விமான நிலைய செயல்பாடுகளை பராமரித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதன்படி, வருகை முனையப் பகுதிக்குள் சாரதி இல்லாமல் வாகனங்களை நிறுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் அதுல கல்கட்டிய வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விதி தனியார் கார்கள், வாடகை வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்துவதோடு, அனைத்து வாகனங்களும் பயணிகளை ஏற்றிச்செல்ல பொருத்தமான நேரத்தில், வாகன நிறுத்துமிடங்களிலிருந்து பிரத்தியேகமாக வருகை முனையப் பகுதிக்குள் நுழைய வேண்டும்.

எனினும் இந்த விதிமுறைகளை ஏற்காமல் செயற்பட்டு, குறிப்பாக 30 நிமிடங்களுக்கு மேல் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version