இலங்கை
நாட்டில் அதிகரித்த மரக்கறிகளின் விலை
நாட்டில் அதிகரித்த மரக்கறிகளின் விலை
தொடர் மழைவீழ்ச்சி காரணமாக மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு மாத காலமாக சந்தைக்கு அதிகளவு மரக்கறிகள் வரத்து காரணமாக, சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக சரிந்தது.
இந்தநிலையில், தற்போது மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதனால் மரக்கறிகளின் விலை உயர்வடைந்து ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 700 ரூபாயாகவும் கறிமிளகாய் ஒரு கிலோ கிராம் 480 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாடுகளில் பயிரிடப்படும் மற்றைய மரக்கறிகளிள் ஒரு கிலோ கிராம் விலை சுமார் 350 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாரஹேன்பிட்டி (Narahenpita) பொருளாதார சந்தையில் இன்றைய தினம் (27) ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவாக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.