இலங்கை

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு!

Published

on

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு!

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”இந்தியா மீது தாக்குதல் நடத்தச் சென்ற போது கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ் உறுப்பினர்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் ஒருவரும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தகவலினை கவனமாக விசாரிக்குமாறு பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

பொலிஸ் சட்டப் பிரிவினால் இது தொடர்பில் தமக்கு விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.” என கூறியுள்ளார்.

Exit mobile version