இலங்கை

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Published

on

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி சில கிராமங்கள் மற்றும் நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டாலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு நிலை அதிகரிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக மழையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதால் எவ்வித நன்மையும் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்த நாட்களில் அடை மழை பெய்து வருகின்ற போதிலும், களனி ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை மற்றும் நோர்டன்பிரிட்ஜ் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வெளியேற்றும் மட்டத்தை எட்டவில்லை.

மகாவலி நீர்த்தேக்கங்களின் விக்டோரியா, ரந்தெனிகல, கொத்மலை மற்றும் மொரகஹகந்த ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவும் குறைவாகவே காணப்படுவதாக அவர் கூறினார்.

வளவ ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குச் சொந்தமான உடவளவ மற்றும் சமனலவெவ நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நீர்த்தேக்கங்களில் விக்டோரியா மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவும் குறைவாக காணப்படுவதுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாரிய நீர்த்தேக்கங்கள் நிரம்புவதற்கு போதிய மழைவீழ்ச்சியை இதுவரை பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version