இலங்கை

கொழும்பில் திடீரென சரிந்து விழுந்த மரங்கள் தொடர்பில் தகவல்

Published

on

கொழும்பில் திடீரென சரிந்து விழுந்த மரங்கள் தொடர்பில் தகவல்

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு பிரதேசத்தில் சரிந்து விழுந்த பெரும்பாலான மரங்கள் ஆபத்தான நிலையில் இருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

50 முதல் 150 வருடங்கள் பழமையான சுமார் 200 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு மாநகர சபை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

அவற்றில் பல மரங்கள் அரிப்பு காரணமாக விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மரங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டு ஏனைய மரங்களின் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்றுடன் தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக கொழும்பு மாநகரப் பகுதிக்குள் 50 மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், விழுந்துள்ள மரங்கள் எதுவும் முன்னர் இனங்காணப்பட்ட அபாயகரமான நிலையில் இல்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காற்று காரணமாக பல மரங்கள் வேருடன் சரிந்து விழுந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின் குழுவொன்று இது தொடர்பாக விசேட சோதனையை நடத்தவுள்ளது.

Exit mobile version