இலங்கை

ஆசியாவின் சிறந்த தலைவராக இன்றும் ரணில் : விஜயகலா

Published

on

ஆசியாவின் சிறந்த தலைவராக இன்றும் ரணில் : விஜயகலா

தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramesinghe) மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரச காணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்தது.

கோவிட் இடர் மற்றும் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் எங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் நாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை.

எமது ஜனாதிபதி ஆசியாவில் படித்த ஒரு சிறந்த தலைவர். அவர் தேசிய பட்டியலிலேயே நாடாளுமன்றம் சென்றார்.

கடந்த காலங்களில் பிழையாக நீங்கள் வாக்களித்ததன் காரணமாகவே பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

அத்துடன், கடந்த கால அரச தலைவர்கள் கோட்டாபய போன்றவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது.

எமது தலைவர் கோவிட் காலத்தில் தடுப்பு மருந்தின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடாத்துமாறு கோரியிருந்தார்.

இருப்பினும், நடாத்தப்பட்ட தேர்தலினால் ஏற்பட்ட செலவீனம் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தவர்களால் நாட்டினை கொண்டு செல்ல முடியாது போனது.

இன்று அனுர குமார திசாநாயக்க, சஜித் என பலர் தேர்தலில் போட்யிட வருகின்றார்கள். எனினும், அன்று பலர் அந்த பொறுப்பினை எடுக்கும் வாய்ப்பு இருந்த போதும் அதனை எடுக்கவில்லை.

எனவே, அடுத்த தேர்தல் எனது அரசியல் பயணத்தின் இறுதி தேர்தல் என்பதால் அந்த தருணத்திலிருந்து நானும் அரசியலை விட்டு விலகி விடுவேன் ”என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version