இலங்கை

யாழில் குடும்ப மோதலை தடுக்கச்சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

Published

on

யாழில் குடும்ப மோதலை தடுக்கச்சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

குடும்பத்தில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் யாழில்(Jaffna) பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதனை அவதானித்த இளைஞன் இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க முற்பட்ட வேளை அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்து மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version