இலங்கை

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது

Published

on

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் கைது

கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை ஒப்படைத்த பெண்ணிடம் 30000 ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எஹலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த அதிபரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விநியோகம் செய்யப்பட்ட உணவிற்கான கொடுப்பனவை பெறுவதற்கு பரிந்துரை செய்வதற்காக குறித்த பெண்ணிடம் அதிபர் 50000 ரூபா கையூட்டலாக கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அதிபர் ஏற்கனவே குறித்த பெண்ணிடம் 20000 ரூபா கையூட்டலாக பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இரண்டாவது தடவையாக குறித்த அதிபர் 30000 ரூபா கையூட்டலை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது லஞ்ச ஊழல் மோசடி தவிப்பு பிரிவினர் அதிபரின் காரியாலயத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version