இலங்கை

வெள்ள நிலைமை ஏற்படும் அபாய எச்சரிக்கை

Published

on

வெள்ள நிலைமை ஏற்படும் அபாய எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக மழை மற்றும் காற்று தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் இருக்கலாம்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில் இடங்களில் மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

மத்திய மலையகத்திலும், வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாட்டின ஏனைய பகுதிகளில் அவ்வப்போது காற்று 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, களு கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் சில இடங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இன்று இரவு 9 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version