இலங்கை

பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளர்

Published

on

பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளர்

இலங்கையின் இறுதி போரை மகிந்த முடிவுக்குக் கொண்டு வந்தது போல், பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(Sri lanka podujana peramuna) கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கக் கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர்.

உரிய நேரம் வரும்போது வெற்றி வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி நடைபோடுவோம்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துக் கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சி தீர்மானித்துள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர் பெயரை, கட்சி முடிவை மீறி அறிவிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர்.

அப்போது தம்மிக்க பெரேரா(Dhammika Perera), மகிந்த ராஜபக்சவின்(Mahinda rajapaksa) செயலாளராகவும், முதலீட்டுச் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நாட்டை மீட்கக்கூடிய தலைவராகவே மகிந்த ராஜபக்சவை அன்று மக்கள் தெரிவு செய்தனர். அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதுடன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அதேபோல் பொருளாதாரப் போரை வெற்றி கொண்டு, நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version