இலங்கை

யாழில் சிற்றுண்டி உட்கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சி

Published

on

யாழில் சிற்றுண்டி உட்கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சி

யாழ்ப்பாணம் (Jaffna) – மருதானார் மடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் துருப்பிடித்த கம்பி துண்டு வைத்து செய்த ரோல் இனங்காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (24.05.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த உணவகத்தில் ரோலினை வாங்கி உட்கொண்ட நபர் அதனுள் கம்பி துண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே குறித்த உணவகத்திற்கு ரோல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version