இலங்கை

யாழிலிருந்து தீவகப்பகுதிகளுக்கான படகு சேவை இடைநிறுத்தம்

Published

on

யாழிலிருந்து தீவகப்பகுதிகளுக்கான படகு சேவை இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும்(25) ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வளிமண்டல திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று (மே 24) காலை 05.30 மணியளவில் 15.0°N மற்றும் 88.4°Eக்கு அருகில் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து 2024 மே 25 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக குவிய வாய்ப்புள்ளதுடன் அதன்பிறகு, அது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக அதே பகுதியில் தீவிரமடையும் என்பதுடன் மிக பலத்த காற்று (60-70) kmph, உடன் கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டது.

காரணமாக பொதுமக்கள் பாதுகாப்புகருதி குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுகளுக்கான கடற்போக்குவரத்துகள் நாளை இடம் பெறமாட்டாது. நயினாதீவிற்கான படகு சேவைகள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version