இலங்கை

சீரற்ற காலநிலையால் 6 பேர் மரணம்

Published

on

சீரற்ற காலநிலையால் 6 பேர் மரணம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றுடனான காலநிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில்,18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளம்(Puttalam) மாவட்டத்திலேயே பெருமளவானோர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் நாளை (25) காலை வரை மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version