இலங்கை

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் தகவல்

Published

on

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் தகவல்

மாரவில மற்றும் மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மரங்கள் உடைந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தன்டிய ஹவான வீதியில் பிலகட்டுமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது பலா மரம் விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹவெவ மெதகொட பிரதேசத்தில் வசித்து வந்த ஹஷினி இஷார லங்கா என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நாத்தாண்டிய நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

இதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளியாப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரும் மழையில் இருந்து தப்பிப்பதற்காக வீதிக்கு அருகாமையில் உள்ள மரத்தின் அடியில் இருந்த போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

சூரியதென்ன, கல்முருவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி என்ற 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலத்த காயமடைந்த பெண் மாதம்பே கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்துக்குள்ளானது.

Exit mobile version