இலங்கை

வெளிநாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதி தொடர்பில் தகவல்

Published

on

வெளிநாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதி தொடர்பில் தகவல்

வெளிநாடுகளிலிருந்து மரக்கறி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் ளெிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரவள்ளி, வத்தாளி உள்ளிட்ட கிழங்கு வகைகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சில தரப்பினர் குற்றம் சுமுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மரக்கறி வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பன மட்டும் இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உருளைக் கிழங்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version