இலங்கை

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

Published

on

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

சிங்கப்பூரில் (Singapore) முதன்முறையாக துணை பொலிஸ் அதிகாரிகள் பதவியில் (Auxiliary Police Officers) பணியாற்றுவதற்காக 16 இலங்கை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், துணை பொலிஸ் பிரிவானது, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களால், நாட்டின் பொலிஸ்துறைக்கு ஆதரவாகப் பணி புரியும் பாதுகாப்பு பிரிவாகும்.

இதற்கமைய, வெளிநாடுகளில், திறமையான இலங்கையர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு, இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version