இலங்கை

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில்

Published

on

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் இறுதி யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றை எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயமானது, ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியின் மூலமாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அதிபர் தேர்தலில் அவர் களமிறங்கும் போது எந்த எந்த கூட்டணியுடனும் சேராது தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இரகசிய பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனது தேர்தல் பிராச்சாரங்களின் முன்னதாக அவர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றையும் எழுதி வெளியிடவுள்ளார்.

குறித்த நாவலானது, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக யுத்தத்தின் போது சந்தித்த சிக்கல்கள் மற்றும் அவரின் வகிபாகம் சார்ந்ததாக அமையவுள்ளது.

Exit mobile version