இலங்கை

கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

Published

on

கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

2024, மே 18ஆம் திகதியன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செய்தியில் இலங்கையில் “இனப்படுகொலை” என்று அழைக்கப்படும் தவறான குற்றச்சாட்டை இலங்கையின் வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.

முன்னதாக இந்த குற்றச்சாட்டை அமைச்சர் அலி சப்ரி நிராகரித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய இத்தகைய மூர்க்கத்தனமான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் அனைத்து முன்னைய தகவல்தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து கனடாவிலோ அல்லது உலகில் வேறு எந்த இடத்திலோ தகுதிவாய்ந்த அதிகாரம் எந்த ஒரு புறநிலை நிர்ணயம் செய்யவில்லை.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு கோரி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாத மோதலின் முடிவுடன் தொடர்புடையதாகும் என்று இலங்கையின் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கனடா உட்பட உலகளவில் 33 நாடுகளில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

இந்தநிலையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய இந்த தவறான கருத்துக்கு பிரதமர் ட்ரூடோவின் ஒப்புதல், வெளிநாடுகளில் வாழும் இலங்கை பாரம்பரியத்தின் மதிப்புமிக்க சமூகமான இலங்கை வம்சாவளி கனேடியர்களிடையே இன நல்லிணக்கத்தை மிகவும் சீர்குலைக்கிறது.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்; என அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள் இலங்கையில் நடந்த மோதலால் பாதிக்கப்பட்டனர்.

உண்மையில், விடுதலைப் புலிகளின் அன்றாட அடக்குமுறையால், வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பான்மையான தமிழ் பொதுமக்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

எனினும் பிரதமர் ட்ரூடோவின் இந்த கருத்துக்கள், இலங்கை மோதலின் சிக்கலான யதார்த்தத்தை புறக்கணிக்கிறது மற்றும் இலங்கையர்கள் மத்தியில் பாதகமாக எதிரொலிக்கிறது

அத்துடன் இலங்கையில் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை சீர்குலைக்கிறது.

எனவே, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பரஸ்பர மரியாதையுடன் பொறுப்பேற்குமாறு கனேடிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் கனடா பிரதமரின் தொடர்ச்சியான அறிக்கைகள் கனடாவின் தேர்தல் வாக்கு வங்கி அரசியலின் விளைவுகளாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version