இலங்கை

தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் – சகோதரி வீட்டுக்குள் பயங்கரம்

Published

on

தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் – சகோதரி வீட்டுக்குள் பயங்கரம்

தென்னிலங்கையில் நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த லசந்த புஷ்பகுமார என்ற 30 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரந்துடுவ பகுதியிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு உயிரிழந்த நபர் சில நண்பர்களுடன் சென்று, சகோதரியின் கணவருடன் முரண்பட்டுள்ளார்.

கடுமையாக தாக்கப்பட்ட குறித்த நபர் கடும் காயங்களுக்குள்ளாகி கோணதுவ பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version