இலங்கை

வெசாக் தினத்தில் காட்சிகளுடன் ஒளிரவுள்ள தாமரை கோபுரம்

Published

on

வெசாக் தினத்தில் காட்சிகளுடன் ஒளிரவுள்ள தாமரை கோபுரம்

வெசாக் (Vesak) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பௌத்த கொடியின் நிறத்தில் தாமரை கோபுரம் ஒளிரவுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த காட்சியானது நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த கண்கவர் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், பிக்சல் ப்ளூம் (Pixel Bloom) இந்த டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் தாமரை கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version