இலங்கை

இலங்கையில் கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் 4 மனைவிகள்

Published

on

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசிக்கும் பிரேமரத்ன அதிகாரி என்ற 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் 4 மனைவிகள் சடலத்திற்கு உரிமை கோரியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளில் பயணித்த இருவரும் குருநாகல் நோக்கிச் சென்ற காரை பின்தொடர்ந்து துரத்த முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version